மரண தண்டனை விதிக்கப்பட்ட கொலைக் குற்றவாளிக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரி வழங்கிய பொதுமன்னிப்பு செல்லாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

🕔 June 6, 2024

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – றோயல் பார்க் கொலைக் குற்றவாளி ஜூட் ஜயமஹாவுக்கு வழங்கிய பொதுமன்னிப்பு, அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு முரணானது என உச்ச நீதிமன்றம் இன்று (06) தீர்ப்பளித்துள்ளது.

அதேவேளைன, குறித்த பொதுமன்னிப்பைரத்துச் செய்வதாகவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், ஜூட் ஷ்ரமந்த ஜயமஹாவுக்கு வழங்கப்பட்ட மன்னிப்பையும் செல்லுபடியற்றதாக்கியுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – மனுதாரருக்கு 10 லட்சம் ரூபா நட்டஈடு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேவேளை ரோயல் பார்க் சம்பவத்தில கொலையுண்ட இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தைக்கு தலா 10 லட்சம் ரூபா இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த பொதுமன்னிப்பின் மூலம் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வேண்டுமென்றே அரசியலமைப்பை மீறியுள்ளார் என்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், உள்ளூர் மற்றும் சர்வதேச மரபுகளின்படி – தற்போது வெளிநாட்டில் உள்ள பிரதிவாதியை நாடு கடத்த தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டது.

பெண்கள் மற்றும் ஊடகக் கூட்டமைப்பினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலித்த நீதியரசர்கள் எஸ். துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பு ராஜகிரிய றோயல் பார்க் வீடமைப்பு தொகுதியில் இவோன் ஜோன்சன் என்ற 19 வயதான யுவதியை 2005ஆம் ஆண்டு கொலை செய்த குற்றத்துக்காக, ஜூட் ஜயமஹாவுக்கு 2012ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

தனது ஜனாதிபதிப் பதவிக்காலம் முடிவடைதற்கு 07 நாட்கள் இருந்த நிலையில், மேற்படி நிலையில் பொது மன்னிப்பை – மைத்திரிபால சிறிசேன வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஜுட் ஜயமஹா மற்றும் கொலை செய்யப்பட்ட யுவான் ஜோன்சன்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்