சிகா வைரஸ் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

🕔 January 28, 2016

Zika virus - 001லங்கையிலிருந்து வெளிநாடு செல்கின்றவர்கள் உலகில் பரவி வரும் சிகா வைரல் தொடர்பில் விழிப்புடன் செயற்படுமாறு சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகில் தற்போது பரவி வரும் சிகா வைரஸ், வயிற்றிலுள்ள குழந்தைகளைக் கூடத் தாக்கக் கூடியதாகும். இவேளை, இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட சிலரின் மூளை கடுமையாகப் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளனர்.

சிகா வைரஸுக்கான சிகிச்சை மற்றும் மருந்துகள் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆயினும் அதிகமான நாடுகளில் மேற்படி வைரஸ் தொடர்பில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தற்போது சிகா வைரஸ் 20 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சிகா வைரஸ், நுளம்புகள் மூலம் பரவுகின்றது. இந்த வைரஸ் தொற்றுக்குள்ளாவோர் காய்ச்சலால் பாதிக்கப்படுவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்