
புகையிரதத் திணைக்களம் 3,000 பேரை புகையிரத உதவியாளர்களாக நியமிக்கவுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, புகையிரத உதவியாளர் பணி வெற்றிடங்களுக்கு 01 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு திட்டத்தின் பணிக்கு அமர்தப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி செயலணியில் பட்டியலிடப்பட்டுள்ள பணியாளர்களை திணைக்களம் ஆட்சேர்ப்பு செய்யவுள்ளது.
அமைச்சரவை மற்றும் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் அங்கிகாரத்துடன், அரச சேவைக்காகப் பட்டியலிடப்பட்டுள்ள பல்நோக்கு அபிவிருத்தி பணிக்குழுவில் இருப்பவர்கள், புகையிரத திணைக்களத்தின் கீழ் ஓய்வூதியத்துடன் கூடிய அரசாங்கப் பணியைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளதாக போக்குவரத்து அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிதி நெருக்கடியின் மத்தியிலும், புகையிரத துறையின் முக்கியமான பணியாளர் பற்றாக்குறையை சமாளிக்க இந்த நடவடிக்கை உதவும்.
பொதுமக்களின் புகைியரதப் போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருப்பதையும் இது உறுதி செய்யும் எனத் தெரிவிக்கப்படுகிறது.



