தலைப்புச் செய்திகள்

கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளராக முஜிபுர் ரஹ்மான் எம்.பி: நாடாளுமன்றத்துக்கு ஏ.எச்.எம். பௌசி

உள்ளூராட்சித் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்கான மேயர் வேட்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானை நியமிக்க அந்தக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச இந்த தீர்மானத்தை, அக் கட்சியின்செயற்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

அடுத்த வாரம் வேட்புமனுக்களை வழங்குவதற்காக முஜிபுர் ரஹ்மான் தனது எம்.பி பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முஜிபுர் ரஹ்மானின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியவுடன் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி நாடாளுமன்றம் பிரவேசிப்பார்.

கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கொழும்பு மாவட்டத்தில் பெற்ற விருப்பு வாக்களின் படி, ஏ.எச்.எம். பௌசிக்கு அடுத்தபடியாக ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளார்.