அடித்தது அதிஷ்டம்: 21,600 கோடி ரூபாய் பெறுமதியான மிகப் பெரிய முதல் பரிசு மூவருக்கு
அமெரிக்க வரலாற்றில் அதிஷ்ட லாபச் சீட்டு ஒன்றில், மிகப்பெரிய முதல் பரிசு மூன்று பேருக்கு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பரிசுத் தொகை நூற்று ஐம்பது கோடி டாலர்கள் பெறுமதியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது – இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 21 ஆயிரத்து 600 கோடி ரூபாயாகும்.
ஆயினும், பரிசை வென்றவர்கள் பற்றிய விபரம் தெரியவிக்கப்படவில்லை. ஆனால், அவர்கள், ஃபுளோரிடா, டென்னெஸ்ஸி மற்றும் கலிபோர்னியா ஆகிய இடங்களை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.