‘ஐஸ்’ போதைப் பொருளுடன், பெண்கள் பாடசாலை முன்பாக நபரொருவர் கைது

🕔 December 30, 2022

– பாறுக் ஷிஹான் –

ட்டக்களப்பு – கல்லடி விவேகானந்தா பெண்கள் பாடசாலைக்கு முன்பாக வைத்து, ஐஸ் போதைப் பொருளுடன் நபர் ஒருவர் நேற்ற (29) கைது செய்யப்பட்டார். 

கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி விவேகானந்தா பெண்கள் பாடசாலைக்கு முன்பாக வைத்து, குறித்த  சந்தேக நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

சந்தேக நபர் – கல்லடி பகுதியை சேர்ந்த 22 வயது மதிக்கத் தக்கவாராவார். அவர் வசமிருந்து ஐஸ் போதைப்பொருள் 2 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளது. 

கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொலிஸ் பரிசோதகர்  எஸ்.எம்.பி.பி.எம். டயஸ்  தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை கைது செய்தனர்.    

கைது செய்யப்பட்டவரும் சான்றுப் பொருட்களும் – காத்தான்குடி  பொலிஸாரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்