தலைப்புச் செய்திகள்

எச்ஐவி தொற்று; நொவம்பரில் 90 பேர் அடையாளம்: சுய பரிசோதனைக் கருவியை வீட்டிலிருந்தபடியே பெறலாம்

டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி

நாட்டில் இந்த ஆண்டு 568 எச்ஐவி தொற்றுடைய நபர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டம் தெரிவித்துள்ளது.

இதில் கடந்த நொவம்பர் மாதத்தில் மட்டும் 90 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எச்ஐவி சுய பரிசோதனை கருவிகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டறிவது அதிகரித்துள்ளதாக, தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராச்சி கூறியுள்ளார்.

எச்ஐவி சுய பரிசோதனை கருவிகள் நாடு முழுவதிலும் உள்ள பாலியல் நோய் சிகிச்சை நிலையங்களில் கிடைக்கின்றன, அங்கு செல்ல விரும்பாதவர்கள், know4sure.lk இணையத்தளத்தின் ஊடாக வீட்டில் இருந்தபடியே ஒரு கருவியை ‘ஓர்டர்’ செய்யலாம்.