ஜனசக்தி நிறுவன பணிப்பாளர் படுகொலைக்கான காரணம் தொடர்பில் தகவல்

🕔 December 16, 2022

னசக்தி காப்புறுதி நிறுவன பணிப்பாளரும், முன்னணி வர்த்தகருமான தினேஸ் சாப்டரின் மரணத்துக்கு நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக இருக்கலாமா என்று சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல், கொழும்பு – கறுவாத்தோட்டத்தில் உள்ள அவரின் வீட்டில் இருந்து புறப்பட்ட வேளையில், தனக்கு பெருந்தொகை பணத்தை தரவேண்டிய ஒருவரை சந்திக்கச் செல்வதாக தினேஸ் சாப்டர், தமது மனைவிடம் கூறிச் சென்றுள்ளார்.

எனினும் நேரமாகியும் அவர் வராதபடியால் அவரின் மனைவி, கணவரின் கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்பை ஏற்படுத்தியுள்ளார்

எனினும் அந்த அழைப்பு துண்டிக்கப்பட்டது.

இதனையடுத்து நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிக்கு இந்த விடயத்தை தினேஸின் மனைவி அறிவித்த நிலையில், நிறைவேற்று அதிகாரி பொரளை மயானத்துக்கு அருகில் கையடக்க தொலைபேசி இருந்த இடத்தை கண்டறிந்துள்ளார்.

மயானத்திற்கு சென்று பார்த்தபோது, தினேஸ் சாப்டர், அவரது கார் இருக்கையில் கட்டப்பட்டு, வயர் ஒன்றினால் கழுத்து நெருக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்த நிறைவேற்று அதிகாரி, உடனடியாகச் செயற்பட்டு, மயானத்தில் இருந்த ஒரு தொழிலாளியின் உதவியுடன் அவரை விடுவித்து, தினேஸ் சாப்டரின் கழுத்தில் இருந்த வயரையும் அகற்றினார்.

இதனையடுத்து அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்தநிலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாதிக்கப்பட்டவரின் காருக்கு அருகில் இருந்து வெளியேறியதை மயானத்தில் இருந்த தொழிலாளர் ஒருவர் பார்த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் கிரிக்கெட் தொடர்புடைய பிரபலம் ஒருவர், தொழிலதிபர் தினேஸ் சாப்டரிடம் கோடிக்கணக்கான ரூபாயை கடனாகப் பெற்றுள்ளதாகவும், இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத்துறையினரிடம் மூன்று முறைப்பாடுகள் செய்துள்ளதாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்