தலைப்புச் செய்திகள்

வெளிநாட்டுக்கு வேலைக்காகச் செல்லும் இலங்கையர்கள் தொகை அதிகரிப்பு

வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்வதற்கான இலங்கையர்களின் தொகை வேகமாக அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தில் மாத்திரம் 02 லட்சத்து 08 ஆயிரத்து 772 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்காகச் சென்றுள்ளதாக பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு வெளிநாடு செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் ஆண்களாவர்.

இதேவேளை, இவ்வருடத்தில் இதுவரை 02 ஆயிரத்து 858 இலங்கையர்கள் தென்கொரியாவுக்கு வேலைக்காக சென்றுள்ளனர்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மொத்தம் 05 ஆயிரம் தொழிலாளர்களை கொரியாவுக்கு வேலைக்கு அனுப்ப எதிர்பார்த்திருப்பதாக பணியகம் தெரிவித்துள்ளது.