தலைப்புச் செய்திகள்

கோட்டா; தப்பியோடிவர் திரும்பி வந்தார்: ‘அரகலய’ தரப்பு கூறுவதென்ன?

நாட்டை விட்டுத் தப்பியோடிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ – கடந்த நள்ளிரவு நாடு திரும்பினார்.

கோட்டாவுக்கு எதிராக நாட்டில் நடந்த போராட்டத்தை அடுத்து, அவர் கடந்த ஜுலை 13ஆம் திகதியன்று இலங்கையிலிருந்து மாலைதீவுக்குத் தப்பிச் சென்றார்.

பின்னர் அங்கிருந்து சிங்கப்பூர் சென்றவர் – தனது பதவியை அங்கிருந்த படியே ராஜிநாமா செய்தார்.சிங்கப்பூரில் வீசா காலம் நீடிக்கப்படாமையினை அடுத்து, தாய்லாந்துக்குப் பயணமானார்.

தற்போது அங்கிருந்தபடி முன்னாள் ஜனாதிபதி கோட்டா, நாடு திரும்பியுள்ளார்.

அவர் விமான நிலையம் வந்தபோது, அவரின் ஆதரவாளர்கள் வரவேற்றனர்.

பின்னர் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்ட அவர், கொழும்பில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கோட்டாபய ராஜபக்ஷ நாடு திரும்பியமை குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ‘அரகலய’ போராட்டக்காரர்கள்; கோட்டாவை ஒருபோதும் நாட்டை விட்டுச் செல்லுமாறு தாம் கூறவில்லை என்றும், அவர் நாடு திரும்பியமை தொடர்பில் எதிர்ப்புக் கிடையாது என்றும் தெரிவித்துள்ளனர்.

வீடியோ