
இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டது.
வாக்கெடுப்பில் ஆதரவாக 120 வாக்குகளும், எதிராக 5 வாக்குகளும் அளிக்கப்பட்டன. 43 பேர் வாக்களிப்பிலிருந்து விலகியிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களும், அண்மையில் எதிர்க்கட்சியில் இணைந்த ஜீ.எல்.பீரிஸ், டளஸ் அழகபெரும400 உள்ளிட்ட 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வாக்களிப்பை புறக்கணித்திருந்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – நிதியமைச்சர் என்ற வகையில், எதிர்வரும் 04 மாதங்களுக்காக இடைக்கால வரவு – செலவுத் திட்டத்தை, அமைச்சரவை அனுமதியுடன் கடந்த ஓகஸ்ட் 30ஆம் திகதி நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றினார்.
இந்நிலையில், நிதியமைச்சரின் இடைக்கால வரவு – செலவுத்திட்டம் மீதான விவாதம் நேற்று முன்தினம் மற்றும் நேற்று, இன்று ஆகிய மூன்று தினங்கள் இடம்பெற்றிருந்தன.
அதற்கமைய, இடைக்கால வரவு – செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று மாலை அளவில் ஆரம்பமானது.



