ஒரு பொருளை வாங்க வருபவரிடம், இன்னொரு பொருளையும் வாங்குமாறு கட்டாயப்படுத்துவது உரிமை மீறல் என அறிவிப்பு

🕔 August 26, 2022

ரு பொருளை வாங்க வருபவரிடம் இன்னொரு பொருளையும் சேர்த்து வாங்குமாறு விற்பனையாளர்கள் கட்டாயப்படுத்தவோ அல்லது ஒரு பொருளின் விற்பனையை மற்றொன்றுடன் இணைக்கவோ உரிமை இல்லை என்று சஊதி அரேபியாவின் வர்த்தக அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.

வாடிக்கையாளர் உரிமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, வாராந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, அந்த அமைச்சின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்ட விளக்கப்படத்தில் இந்த இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த விதிக்கு இரண்டு விதிவிலக்குகள் உள்ளன எனவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்கும் போது ஒரு பொருளை இலவசமாகப் பெறுவதற்கான சலுகையை கடை அறிவித்திருந்தால், கடைகள் அல்லது விற்பனையாளர்கள் இந்த முறையைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள்.

அடுத்து, ஒரு தயாரிப்பின் சிற்றேடு அல்லது அட்டவணையில் இரண்டு உருப்படிகளும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தால் இந்த முறையைப் பயன்படுத்தலாம்.

இலங்கையில் பொருட்களுக்கான தட்டுப்பாடுகள் நிலவி வரும் தற்போதைய காலகட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகள் அதிகளவில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உதாரணமாக, பால்மாவுக்கு அதிக தட்டுப்பாடு நிலவிய காலகட்டத்தில் வேறு சில பொருட்களையும் பால்மாவுடன் சேர்த்து வாங்க வேண்மென கொள்வனவாளர்களை வியாபாரிகள் வற்புறுத்தியிருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்