
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் விசேட மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
ரஞ்சன் ராமநாயக்கநீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 2021 ஜனவரியில் நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் நீதிமன்றத்தை அவமதித்ததற்காக அவர் நேற்று நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரினார்.
நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், தான் கூறிய கருத்து உண்மைக்குப் புறம்பானது என்றும், கூறிய கருத்துகளை வாபஸ் பெறுவதாகவும் தெரிவித்தார்.
இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதியின் நிபந்தனையுடன் கூடிய மன்னிப்புக்கான ஆவணத்தில், ஜனாதிபதியின் ஒப்புதலுடன் கையெழுத்திட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எதிர்காலத்தில் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடக்கூடாது என முன்னாள் எம்.பிக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.



