தலைப்புச் செய்திகள்

“நாட்டு மக்களை கொள்ளையடித்தவர்களுக்கு எதிரான எனது நடவடிக்கை தொடரும்”: வெலிகடை சிறையிலிருந்து வெளியேறிய ரஞ்சன் தெரிவிப்பு

“நான் அரசியலில் ஈடுபடுவேன். தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்” என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து இன்று ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பை பெற்றுக் கொண்டு வெளியேறும் போது ஊடகவியலாளர்களுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர் மனுஷ நாணயக்கார மற்றும் அவரின் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் இதன்போது வரவேற்றனர்.

“இந்த நாட்டின் அப்பாவி மக்களை கொள்ளையடித்தவர்களுக்கு எதிரான எனது நடவடிக்கைகளைய நான் தொடருவேன்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.