
விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த தானிஸ் அலி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அவருடன் மேலும் சிலருக்கும் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் இவர்கள் ஆஜர் செய்யப்பட்ட போது, இவர்களுக்கு நீதவான் பிணை வழங்கினார்.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் அத்துமீறி நுழைந்தமை மற்றும் ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்தமை உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தொடர்பான செய்தி: தானிஸ் அலியை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க உத்தரவு



