தலைப்புச் செய்திகள்

மண்ணெண்ணெய் விலை அதிகரிப்புக்கு காரணம் வெளியிட்டார் அமைச்சர்; மானியம் வழங்கவும் முன்வருகை

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மீன்பிடி மற்றும் மண்ணெண்ணெய்யை நம்பியுள்ள தோட்டத் துறைகளுக்கு நேரடி பண மானியத்தை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளது.

நேற்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் மண்ணெண்ணெய் விலை 340 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பழைய விலை 87 ரூபாவாகும். பல மாதங்களாகா சந்தையில் மண்ணெண்ணெய் இல்லாத நிலையிலேயே அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

மண்ணெண்ணெய் விலை திருத்தமானது பல வருடங்களாக கட்டாயமாக இருந்தத என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு நஷ்டம் ஏற்படுவதற்கு மண்ணெண்ணையை மானிய விலையில் விற்பனை செய்தமையே பிரதான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது செலவினங்களுக்கு இணையான விலைகளுடன், குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், மீன்பிடி மற்றும் மண்ணெண்ணெய்யை நம்பியுள்ள தோட்டத் துறைகளுக்கு நேரடி பண மானியத்தை அரசாங்கம் முன்வந்துள்ளது.