தலைப்புச் செய்திகள்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரணி மீது கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஆர்ப்பாட்ட பேரணி மீது, பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டு மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

போராட்டக்காரர்களை கைது செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்குமாறும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் இன்று கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்திலிருந்து ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

போராட்டக்காரர்கள் நகர மண்டபம் ஊடாக கொம்பெனித் தெருவை அடைந்ததையடுத்து பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.