
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24ஆம் திகதி நாடு திரும்புவார் என ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வு பிரிவிலிருந்து இன்று (17) வெளியேறும் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.
விமானப்படைக்கு மிக் விமானங்களை கொள்வனவு செய்ததில் 07 மில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கைப் பெறுமதியில் சுமார் 252 கோடி ரூபா) முறைகேடாகப் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்தார்.
நாட்டிலிருந்து தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ஷ தற்போது தாய்லாந்தில் உள்ளார்.



