தலைப்புச் செய்திகள்

இந்தியாவின் அதானி குழுமத்துக்கு மன்னார், பூநகரி பிரதேசங்களில் காற்றாலை மின் திட்டம் அமைக்க தற்காலிக அனுமதி

இந்தியாவின் அதானி குழுமத்துக்கு – மன்னார் மற்றும் பூநகரி பிரதேசங்களில் இரண்டு காற்றாலை மின் திட்டம் அமைக்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்த திட்டம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டைக் கொண்டதாக இருக்கும் என்று கூறியுள்ளார்.

நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை மின்சார சபை மற்றும் நிலையான எரிசக்தி அதிகார சபையின் அதிகாரிகளை தான் சந்தித்ததாகவும் கஞ்சன குறிப்பிட்டுள்ளார்.

மன்னாரில் 286 மெகாவாட் மற்றும் பூநகரியில் 234 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு காற்றாலை திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கை மின்சார சபை சட்டத் திருத்தங்களினால் தாமதமான 46 திட்டங்களில் 21 திட்டங்களுக்கு அடுத்த வாரம் மின்சாரம் கொள்வனவு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.