தலைப்புச் செய்திகள்

ஹெரோயின், போலி பணத்தாள்களுடன் கல்முனையில் நபர் கைது

– பாறுக் ஷிஹான் –

ஹெரோயின் மற்றும் போலி பணத்தாள்களை தன்வசம் வைத்திருந்த ஒருவரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை முகாமுக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவல் ஒன்றினை அடுத்து நேற்று திங்கட்கிழமை (15) நள்ளிரவு கல்முனை காஸீம் வீதியில் வைத்து சந்தேக நபர் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.

இவ்வாறு கைதான நபர் 39 வயது மதிக்கத்தக்கவராவார். சந்தேக நபர் வசம் இருந்த 5000 ரூபா போலி பணத்தாள் மூன்று, ஹெரோயின் போதைப்பொருள் 3.1 கிராம் என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட நபர் சான்றுப் பொருட்களுடன் கல்முனை  பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக, விசேட அதிரடிப்படையினரால் பாரப்படுத்தப்பட்டார்.