தலைப்புச் செய்திகள்

டீசல் விலை இன்றிரவு குறைகிறது: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

டீசல் விலை குறைக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்று இரவு 10.00 மணி முதல் டீசல் ஒரு லீட்டரின் விலை 10 ரூபாவினால் குறைகிறது.

அந்த வகையில் ஒரு லீட்டர் டீசலின் புதிய விலை 430 ரூபாவாக அமையும்.

ஏனைய எரிபொருள்களுக்கான விலைகளில் மாற்றங்கள் இல்லை எனவும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தபானம் தெரிவித்துள்ளது.