தலைப்புச் செய்திகள்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நஸீப், சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்கிறார்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த அப்துல்லாஹ் நஸீப் – சட்டத்தரணியாக எதிர்வரும் 05ஆம் திகதி உச்ச நீதிமன்றில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

இவர் ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர் நியாஸ் மௌலவி மற்றும் நசீமா ஆகியோரின் புதல்வராவார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல ராணுவப் பல்கலைக்கழகத்தில் நஸீப் தனது சட்டத்துறைப் பட்டப்படிப்பை (LLB) நிறைவு செய்துள்ளார்.

நஸீப் உள்ளிட்ட சட்டத் தரணிகள் சத்தியப் பிரமாணம் செய்யும் நிகழ்வு எதிர்வரும் 04ஆம் திகதி தொடக்கம் 12ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

நஸீப் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளும் தினத்தில், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்களான யசந்த கோட்டாகொட மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொள்கின்றனர்.

சட்டத்தரணி நஸீப், புகைப்படத்துறையில் அதீத ஈடுபாடுள்ளவர் என்பதும் அவரின் பல புகைப்படங்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.