நாடு திரும்புகிறார் கோட்டா: அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல தெரிவிப்பு

🕔 July 26, 2022

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் இருந்து நாடு திரும்புவார் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன இன்று (26) தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் குடிவரவு அதிகாரிகளின் கூற்றுப்படி; ஜூலை 14ஆம் திகதியன்று தனிப்பட்ட பயணமாக அங்கு வந்த முன்னாள் ஜனாதிபதிக்கு, 14 நாள் குறுகிய கால பயண அனுமதியை சிங்கப்பூர் வழங்கியுள்ளது.

நாட்டில் நடந்த மக்கள் எழுச்சிப் போராட்டத்தையடுத்து இலங்கையிலிருந்து மாலைதீவு சென்று, அங்கிருந்த சிங்கப்பூர் பயணமான கோட்டாபய ராஜபக்ஷ, சிங்கப்பூரில் இருந்தவாறே ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உடனடியாக கைது செய்யுமாறு கோரி, சிங்கப்பூர் சட்ட மா அதிபருக்கு சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டத்தின் சட்டத்தரணிகள் – புகார் ஒன்றை கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: கோட்டாவை உடனடியாகக் கைது செய்யுமாறு, சிங்கப்பூர் சட்ட மா அதிபரிடம் சர்வதேச அமைப்பு முறைப்பாடு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்