தலைப்புச் செய்திகள்

ஜனாதிபதியாக ரணில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

இலங்கையின் 08ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் அவர் சற்று முன்னர் பதவிப் பிரமாணம் செய்தார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந் நிகழ்வு இடம்பெற்றது.

கோட்டாபய ராஜபக்ஷ ராஜிநாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்ட ஜனாதிபதி வெற்றிடத்துக்கு நாடாளுமன்ற தேர்தல் மூலம் நேற்றைய தினம் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.