
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் தம்மை ஜனாதிபதியாக தெரிவு செய்தால், ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று (14) தெரிவித்துள்ளார்.
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒரு குழு உட்பட சில நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுமாறு என்னிடம் கோரப்பட்டுள்ளது. எனவே, நான் தெரிவு செய்யப்பட்டால் – பதவியை ஏற்றுக்கொள்வேன்” என முன்னாள் ராணுவத் தளபதி இன்று ஊடகவியலாளர் சந்திப்பில் கூறினார்.
“இது தொடர்பில் உங்கள் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்தீர்களா” என்று ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு, “இல்லை” எனத் தெரிவித்த அவர்;. “எனது தனிப்பட்ட கருத்துக்கள் குறித்து நான் தலைவரிடம் சொல்ல வேண்டியதில்லை” என்றார்.
மேலும், “போராட்டக்காரர்கள் வசம் உள்ள அரச கட்டிடங்களை ஒப்படைக்க அவசரப்பட வேண்டாம்” என்றும் அவர் தெரிவித்தார்.



