
பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள ‘ரக்னா ஆரக்ஸன லங்கா லிமிடெட்’ (Rakna Arakshaka Lanka Limited) நிறுவனத்தை ஜூலை 14 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை பதில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார்.
‘ரக்னா ஆரக்ஸன லங்கா லிமிடெட்’ நிறுவனத்தை முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த வாரம் வெளியிட்டிருந்தார்.
முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக தம்மிக பெரேரா அண்மையில் பதவியேற்றிருந்தார்.
ஆயினும், கடந்த 09ம் திகதி போராட்டம் சூடு பிடித்தமையை அடுத்து, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2006ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ‘ரக்னா ஆரக்ஸன லங்கா லிமிடெட்’ என்பது, உயர்தர பாதுகாப்பு சேவைகளை வழங்கும் இலங்கை அரசாங்கத்துக்குச் சொந்தமான வணிக நிறுவனமாகும்.




