
நாடு முழுவதும் அமுலாகும் வகையில் நாளை (14) அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் 16ம் பிரிவின் கீழ் குறித்த ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளது.
பதில் ஜனாதிபதி என்ற அடிப்படையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
முன்னதாக, மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது, நாடுமுழுவதும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.



