தலைப்புச் செய்திகள்

ரூபவாஹினி, ஐரிஎன் தொலைக்காட்சி அலைவரிசைகளின் ஒளிபரப்புகள் இடைநிறுத்தம்

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (ஐரிஎன்) ஆகிய அரச தொலைக்காட்சி ஒலிபரப்பு கள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன கலையத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ளமையினால் இவ்வாறு ஒளிபரப்புகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் நேரலையாக ரூபவாஹினி மற்றும் ஐரிஎன் தொலைக்காட்சிகளில் தோன்றி உரையாற்றுவதற்கு போராட்டக்காரர்கள் விடுத்த வேண்டுகோளை, அந்த நிறுவனங்களின் நிருவாகத்தினர் நிராகரித்திருந்தனர்.

இதனையடுத்து நேற்றை ரூபவாஹினியின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.