தலைப்புச் செய்திகள்

கடவுச் சீட்டுப் பெற வரிசையில் நின்றவருக்கு பிரசவ வலி; பெண் குழநதை கிடைத்தது

பெண் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்

குடிவரவு – குடியகல்வு திணைக்கள பத்தரமுல்ல தலைமைக் காரியாலயத்தின் வரிசையில் நின்ற பெண்ணொருவருக்கு இன்று (07) குழந்தையொன்றைப் பெற்றெடுத்தார்.

26 வயதான குறித்த பெண் – கடவுச்சீட்டு பெறுவதற்காக நேற்று மாலை தொடக்கம் கணவருடன் வரிசையில் நின்றுள்ளார்.

இதன்போது இவருக் பிரசவ வலி ஏற்பட்டது. இதனையடுத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள ஊழியர்களின் உதவியுடன் அவர் மவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபருக்கு – பெண் குழந்தை பிறந்துள்ளது.

ராணுவத்தினரால் உரிய நேரத்தில் வழங்கப்பட்ட உதவியானது குறித்த பெண் பாதுகாப்பாக குழந்தையைப் பெற்றெடுத்ததை உறுதிப்படுத்த உதவியதாக ராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.