‘நல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகளில் வழிப்படுத்தல்’: திட்ட வரைபை தயாரித்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை

🕔 May 9, 2022

– முன்ஸிப் அஹமட் –

ள்ளுராட்சி சபைகளில் உறுப்பினர்களாகவுள்ள பெண்களை ‘நல்லிணக்கம் மற்றும் சமாதான முயற்சிகளில் வழிப்படுத்தல்’ எனும் திட்டத்தின் கீழான பயிற்சிப் பட்டறையொன்று நேற்று (08) ஒலுவில் ‘கிறீன் வில்லா’வில் இடம்பெற்றது.

சமாதானம் மற்றும் நல்லிணக்க முயற்சிகளை பெண்கள் சுயமாக மேற்கொள்வதற்கும், அவற்றுக்குரிய பிரச்சினைகளை அடையாளம் கண்டு – தீர்வுகளை வகுத்து, நடைமுறைப்படுத்துவதற்குமான திட்ட வரைபை எவ்வாறு தயாரித்தல் என்பது தொடர்பான பயிற்சிப் பட்டறையே நேற்றைய தினம் நடத்தப்பட்டது.

‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட்’ அனுசரணையுடன், பாதிப்புற்ற பெண்கள் அரங்கத்தின் ஊடாக இந்த செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

‘சேர்ச் ஃபோர் கொமன் கிரவுன்ட்’ நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ஆலோசகர் நளினி ரட்னராஜா தலைமயில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி சபைகளின் தேர்வு செய்யப்பட்ட பெண் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உள்ளுராட்சி அதிகாரி அன்பழகன் குரூஸ், இப் பயிற்சிப் பட்டறையில் வளவாளராகக் கலந்து கொண்டார்.

இத்திட்டத்தின் முதலாம் கட்டப் பயிற்சி ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், தற்போது பெண் உள்ளுராட்சி உறுப்பினர்களின் கிராமங்களில் இது தொடர்பான திட்டங்களை முன்னெடுப்பதற்குரிய பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

திட்டங்களை வகுத்தல், எழுதுதல், வரவு – செலவுத் திட்டத்தைத் தயாரித்தல் ஆகியவை தொடர்பான விளக்கங்கள் இதன்போது வழங்கப்பட்டன.

இத்திட்டத்துக்கான உள்ளுர் வழங்களை அடையாளம் காணுதல் தொடர்பாகவும் நேற்றைய பயிற்சிப் பட்டறையின்போது விளக்கமளிப்பப்பட்டது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 05 கிராமங்களைத் தேர்ந்தெடுத்து இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

அடுத்தவரை எதிர்பாராமல் தமது வழங்களை தாமே பயன்படுத்தி பயன்களைப் பெற்றுக் கொள்தல் இத்திட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.

இந்தப் பயிற்சிப்பட்டறையினை – பாதிப்புற்ற பெண்கள் அரங்கின் திட்ட இணைப்பாளர் கமலவாணி சுதாகரன் நெறிப்படுத்தினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்