உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை, அமைச்சர் வாசு கையளித்தார்

🕔 March 14, 2022

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை அமைச்சின் செயலாளரிடம் இன்று (14) கையளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன என, ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர்களாக இருந்த விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை பதவி நீக்கம் செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வாசுதேச நாணயகார முன்னதாக அமைச்சுப் பணிகளை புறக்கணித்தார்.

எனினும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே, அவர் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை அமைச்சின் செயலாளரிடம் கையளித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்