கெர்ஷன் நகர் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், யுக்ரேன் – ரஷ்யாவுக்கு இடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை ஆரம்பம்

🕔 March 3, 2022

யுக்ரேன் – ரஷ்யா நாடுகளுக்கிடையிலான இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

யுக்ரேன் தெற்கிலுள்ள கெர்ஷன் நகரை ரஷ்யப் படைகள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தப் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளது.

இதேவேளை யுக்ரேன் தலைநகர் கீவ், வடகிழக்கு கார்கிவ் மற்றும் தென்கிழக்கில் உள்ள மரியுபோல் உட்பட பல நகரங்கள் தொடர்ந்து ரஷ்யாவின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருகின்றன.

இந்த நிலையில் ரஷ்யப் படைகள் மரியுபோல் நகரின் முக்கியமான பொதுமக்கள் இடங்கள் மீது தொடர்ந்தும் வேண்டுமென்றே ஷெல் தாக்குதல்களை நடத்தி வருவதாக, மரியுபோல் நகர சபை தெரிவித்துள்ளது.

இது இவ்வாறிருக்க யுக்ரேனின் தற்காப்பு எல்லைகள் தக்கவைக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஜனாதிபதி கூறியுள்ளார்.

ரஷ்யாவின் தாக்குதலுக்கு மத்தியில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் யுக்ரேனில் இருந்து வெளியேறியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்