ரஷ்ய அணு ஆயுதப் படையினரை தயார் நிலையில் இருக்குமாறு புடின் அறிவுறுத்தியுள்ள நிலையில், பேச்சுக்கு தயார் என யுக்ரேன் அறிவிப்பு

🕔 February 27, 2022
யுக்ரேனில் நிலை கொண்டுள்ள ரஷ்யப் படை

ஷ்யாவுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார் என யுக்ரேன் அறிவித்துள்ளது.

உக்ரைன்- பெலாரஸ் எல்லையில் ‘முன்நிபந்தனைகள் இல்லாமல்’ பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பும் என்று யுக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஷெலென்ஸ்கி கூறியுள்ளர்.

இது இவ்வாறிருக்க ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், ரஷ்யாவின் அணுசக்தி படைகளை உஷார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை ரஷ்யப் படைகளுடனான சண்டையின் பின்னர், நாட்டின் இரண்டாவது பெரிய நகரத்தை உக்ரேனியப் படைகள் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாக, கார்கிவ் ஆளுநர் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிலையில் யுக்ரேன் தலைநகர் கிவ்வில் ரஷ்ய படையினர் யாரும் இல்லை என்றும், நகரின் பாதுகாப்பு உறுதியாக இருப்பதாகவும் கிவ் மேயர் மேயர் கூறியுள்ளார்.

ரஷ்யாவின் தாக்குதல் ஆரம்பித்தலில் இருந்து 360,000 க்கும் அதிகமான மக்கள் யுக்ரேனில் இருந்து வெளியேறியுள்ளனர் என்று ஐ.நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்