இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை: இன்று பதிவு

🕔 February 22, 2022

ணிகள் அடிக்கப்பட்ட பலகை மீது படுத்துக் கொண்டு, தனது உடலில் அதிக அளவு கொங்றீட் கற்களை வைத்து உடைத்து, இலங்கையர் ஒருவர் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

ஹிங்குராங்கொடையைச் சேர்ந்த ஜனக காஞ்சன, இன்று (22) நடைபெற்ற வைபவத்தில் இந்த புதிய கின்னஸ் சாதனையை படைத்தார்.

54.97 வினாடிகளில் 35 கொங்றீட் கற்களை உடைத்து இந்த சாதனையை படைத்தார்.

ஆணிகள் அடிக்கப்பட்ட பலகையொன்றின் மீது, இவர் படுத்துக் கொண்டிருக்க, அவரின் வயிற்றில் கொங்றீட் கற்களை மாறி மாறி இருவர் வைத்துக் கொண்டிருக்க, அவற்றினை ஒருவர் பாரிய சுத்தியல் ஒன்றினால் அடித்து உடைத்து – இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Comments