அக்கரைப்பற்று பிரதேச சபை வாசிகசாலைகளில் வீரகேசரிக்குத் தடை: சபையில் தீர்மானம்

🕔 February 4, 2022

– நூருல் ஹுதா உமர் –

வீரகேசரி பத்திரிகையை அக்கரைப்பற்று பிரதேச சபையின் அதிகாரத்தின் கீழுள்ள நூலகங்களுக்கு கொள்வனவு செய்வதில்லை என அக்கரைப்பற்று பிரதேச சபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திருகோணமலை ஷண்முகா இந்து மகளிர் கல்லூரியில் ஹபாயா அணிந்து வந்த ஆசிரியையை பாடசாலை நிர்வாகத்தினர் தாக்கிய விடயத்தை திரிவுபடுத்தி வீரகேசரி பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியியை, தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தலைமையிலான அக்கரைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த சபை அமர்வில், நேற்று (3ஆம் திகதி) வன்மையாக கண்டித்து பத்திரிக்கைக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்பேது அக்கரைப்பற்று பிரதேசசபையின் அதிகாரத்துக்குட்பட்ட வாசிகசாலைகளில் வீரகேசரி பத்திரிகையை வைப்பதில்லை என்கிற தீர்மானமும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இத் தீர்மானத்தை அக்கரைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ரி.எம். ஐய்யூப் முன்மொழிந்தார். இதனை சபை ஏகமனதாக அங்கீகரித்தது.

அத்துடன சக்தி தொலைக்காட்சியின் நியூஸ் பெஸ்ட் செய்தியும் ஷண்முகா பாடசாலை விவகாரத்தில் பக்கச்சார்பாக நடந்து கொண்டதை, அக்கரைப்பற்று பிரதேச சபை வன்மையாக கண்டித்ததோடு, அந்த ஊடகத்துக்கு எதிராக அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாசிக் கண்டனப் பிரேரணையொன்றினைக் கொண்டு வந்து நிறைவேற்றினார்.

தொடர்பான செய்தி: வீரகேசரி, தினக்குரல் பத்திரிகைகள் அம்பாறை மாவட்டத்தில் எரிப்பு (வீடியோ இணைக்கப்பட்டுள்ளது)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்