சிறைக் கைதி மரணம்; உத்தியோகத்தர்கள் மூவர் பணி நீக்கம்: “நாயைப் போல் அடித்துக் கொன்றனர்” என மகள் குற்றச்சாட்டு

🕔 January 24, 2022

துருகஸ் பிரதேசத்திலுள்ள திறந்த சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மூவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் 49 வயதான லலித் சமிந்த ஹெட்டிகே என அடையாளம் காணப்பட்ட கைதி, சிறையிலிருந்து தப்பிச் சென்றதாகவும், கிராம மக்களில் ஒரு குழுவினரால் கொல்லப்பட்டதாகவும் சிறைச்சாலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எனினும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களாலேயே அவர் கொல்லப்பட்டதாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

மாத்தறை, கனங்கே – கந்தேவத்த பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய பாதிக்கப்பட்ட நபருக்கு, 10ஆயிரம் ரூபா திருடிய குற்றத்துக்காக கடந்த வருடம் மார்ச் மாதம் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தினால் மூன்று வருட கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பின்னர் அவர் எம்பிலிப்பிட்டியவில் உள்ள கதுருகசர திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

தமது தந்தை குடும்பத்துடன் தொலைபேசியில் கடைசியாக பேசி மூன்று நாட்களுக்குப் பிறகு, சிறைச்சாலையை விட்டுத் தப்பியோடியதை அறிந்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்ததாக, இறந்தவரின் மகள் தெரிவித்துள்ளார். மேலும் தன் தந்தை அடித்துக் கொல்லப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“திறந்தவெளிச் சிறைச்சாலைக்கு சிகரெட் மற்றும் போதைப்பொருள் எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதை எனது தந்தை உயர் அதிகாரிகளிடம் வெளிப்படுத்தியுள்ளார். அதனால்தான் அவர் கொல்லப்பட்டார் என்று நாங்கள் நம்புகிறோம். ஒரு நாயைப் போல் அவர் அடித்துக் கொல்லப்பட்டதைப் பார்த்தேன். என் தந்தைக்கு நீதி வேண்டும்” எனவும், இறந்தவரின் மகள் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்