
சிறைத் தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, மீண்டும் உச்ச நீதிமன்றில் இன்று(24) ஆஜர்செய்யப்படுகிறார்.
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக அவர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் நான்காண்டுகால கடூழிய சிறைத் தண்டனையை அவர் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையிலேயே, நீதிமன்றத்தை அவமதித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் நிமித்தம், ரஞ்சன் ராமநாயக்க இன்று உச்ச நீதிமன்றில் ஆஜர் செய்யப்படுகின்றார்.



