பொரளை தேவாலய கைக்குண்டு விவகாரம்: பாதுகாப்பு செயலாளர் ஊடகங்கள் முன்பாக உறுதி வழங்கினார்

🕔 January 15, 2022

பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை நிறைவு செய்வதற்கு மேலும் கால அவகாசம் தேவை என பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கண்டியில் வைத்து ஊடகங்களிடம் பேசிய அவர்; “சம்பவம் இடம்பெற்ற 24 மணித்தியாலங்களுக்குள், அது தொடர்பான விமர்சனங்களை முன்வைப்பது பொருத்தமற்றது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“குறித்த பகுதியில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டதோடு அதனை அங்கு வைத்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரின் ஊடாக மேலும் கைது நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் சம்பவம் இடம்பெற்று 24 மணித்தியாலங்களில் விசாரணைகளை நிறைவு செய்து கைது நடவடிக்கைகள் இடம்பெற வேண்டுமாயின் அது அதிசயமான விடயமாகும்.

இந்த விடயத்துடன் தொடர்புடைய சகல சந்தேக நபர்களும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என நான் வாக்குறுதியளிக்கின்றேன்.

இந்தநிலையில் விசாரணைகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைப்பதை விடுத்து, விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட வேண்டும்” என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: பொலிஸார் திட்டமிட்டு கதையொன்றைப் பரப்புகின்றனர்: பொரளை தேவாலய குண்டு விவகாரம் தொடர்பில், மல்கம் ரஞ்சித் குற்றச்சாட்டு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்