ஐம்பது வருட இலக்கியச் செயற்பாடு; 09 நூல்கள் எழுதி வெளியிட்டவர்: பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் ‘இலக்கியப் பொன்விழா’ நாளை

🕔 January 14, 2022

– ஹனீக் அஹமட் –

‘பாவேந்தல்’ எனும் அடைமொழியுடன் அழைக்கப்படும் கவிஞர் பாலமுனை பாறூக்கின், 50 ஆண்டு கால இலக்கியச் செயற்பாடுகளை பாராட்டிக் கௌரவிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘இலக்கியப் பொன்விழா’ நிகழ்வு, நாளை (15) சனிக்கிழமை 2.45 மணிக்கு பாலமுனை எம்.சி. அமீர் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பீடாதிபதி கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் தலைமையில் இவ் விழா நடைபெறுகிறது.

இதில் முன்னிலை அதிதிகளாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன், முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் மற்றும் தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

பாவேந்தல் பாறூக் – இலக்கியச் செயற்பாடுகள்

ஐம்பது வருடங்களாக இலக்கியச் செயற்பாடுகளில் ஈடுபட்டு வரும் மூத்த கவிஞர் பாவேந்தல் பாலமுனை பாறூக்; இதுவரையில் 09 கவிதை நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார். அவை;

  1. பதம் (1987)
  2. சந்தனப் பொய்கை (2009)
  3. கொந்தளிப்பு (2010)
  4. தோட்டுப்பாய் மூத்தம்மா (2011)
  5. பாலமுனை பாறூக்கின் குறும்பாக்கள் (2013)
  6. வலைக்குள் மலந்த வனப்பு (2017)
  7. பாமுனை பாறூக்கின் மூன்று நவீன காவியங்கள் (2020)
  8. மீளப்பறக்கும் நங்கணங்கள் – நவீன காவியம் (2020)

இவரின் மேற்படி நூல்களில் ‘தோட்டுப்பாய் மூத்தம்மா’ எனும் கவிதை நூலுக்கு அரச சாகித்திய விருது உள்ளிட்ட பல விருதுகள் கிடைக்கப்பெற்றன.

மேலும் பாவேந்தல் பாலமுனை பாறூக்கின் இலங்கியச் செயற்பாட்டை கௌரவித்து, அவருக்கு 2009ஆம் ஆண்டு அரசின் ‘கலாபூஷண்’ விருது வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இவர் அரச வங்கியொன்றில் அதிகாரியாகக் கடமையாற்றி, தற்போது ஓய்வு பெற்றுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்