ஓர் உள்ளுராட்சி சபை தவிர, நாட்டிலுள்ள ஏனைய சபைகள் அனைத்தின் பதவிக் காலங்களும் நீடிப்பு

🕔 January 11, 2022

நாட்டிலுள்ள 341 உள்ளுராட்சி சபைகளில், 340 சபைகளின் பதவிக் காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளன.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் வெளியிட்டுள்ளார்.

இதன்படி 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி வரை 275 உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய 24 மாநகர சபைகள், 41 நகர சபைகள் மற்றும் 275 பிரதேச சபைகள் என, 340 உள்ளுராட்சி சபைகளின் உத்தியோகபூர்வ கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளன.

இவ்வருடம் மார்ச் மாதம் 20ஆம் திகதி மேற்படி உள்ளுராட்சி சபைகளின் பதவிக் காலம் நிறைவடையவிருந்த நிலையிலேயே, இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு மேற்படி 340 உள்ளுராட்சி சபைகளுக்கும், 2019ஆம் ஆண்டு எல்பிட்டி பிரதேச சபைக்குமென 341 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன.

இந்தத் தேர்தல்களில் 8690 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்