சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை: மைத்திரி குற்றச்சாட்டு

🕔 January 10, 2022

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதேவேளை, தேர்தலின் பின்னர் பொதுஜன பெரமுனவின் தலைவர்கள் தமது நாடாளுமன்ற உறுப்பினர்களை குழம்பில் உள்ள கறிவேப்பில்லை போல் தூக்கி எறிந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ள உடன்படிக்கையின் நிபந்தனைகள் எதுவும் இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் இவ்வாறான உணவுத் தட்டுப்பாடு நாட்டில் இருந்ததில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்