“நாளையிலிருந்து நீதிமன்றம் செல்வேன்”; ஊடகவியலாளர்களிடம் கூறிவிட்டு, முச்சக்கர வண்டியில் கிளம்பினார் சுசில்

🕔 January 4, 2022

ங்களுக்குள்ள கல்வித் தகைமை வைத்து, சுகாதார ஊழியராகவேனும் பணியாற்ற முடியாதவர்களுக்கு நாடாளுமன்றில் பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் தெரியாது எனவும், முன்னாள் ராஜாங்க அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.

ராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து – தான் நீக்கப்பட்டதை அறிந்து கொண்ட அமைச்சர், தனது அமைச்சிலிருந்து வெளியேறியபோது அவரைச் சந்தித்த ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

“நேற்று முன்தினம் நான் சந்தைக்குச் சென்ற போது, உங்களைப் போன்ற ஊடகவியலாளர் ஒருவர் என்னிடத்தில் பொருட்களின் விலையேற்றம் தொடர்பாக கேள்வியெழுப்பினார். மிளகாய் ஒரு கிலோ 1200 ரூபா என்றெல்லாம் கூறினார். அதற்கு நான்; ‘விவசாயத்துறை தோல்வியடைந்துள்ளது. அதன் கொள்கைகள் தோல்வி அடைந்துள்ளன’ என்று கூறினேன். மக்களுக்காகவே நான் பேசினேன். நேற்று அமைச்சரவையிலும் ஏதேனும் பேசி இருக்கக் கூடும்” எனவும் இதன்போது அவர் குறிப்பிட்டார்.

“ராஜாங்க அமைச்சுப் பதவியில் இருந்து என்னை விலக்கியுள்ளதாக அறியக் கிடைத்தது. அது பெரிய விடயமல்ல. 2000 ஆம் ஆண்டு நான் அமைச்சரானேன். எனக்கு தொழில் இருக்கின்றது அல்லவா. நாளையிலிருந்து நான் நீதிமன்றம் செல்வேன்”.

“கல்வித் தமைமைக்கு ஏற்ப சுகாதார ஊழியராகவேனும் பணிபுரிய முடியாதவர்களுக்கு, நாடாளுமன்றத்தில் பொறுப்புகள் வழங்கப்பட்டு உள்ளது அல்லவா? அவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் தெரியாது” எனவும் அவர் தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களிடம் பேசிய பின்னர் தனது அமைச்சிலிருந்து வெளியேறிய சுசில் பிரேமஜயந்த, முச்சக்கர வண்டியில் கிளம்பிச் சென்றார்.

சுசில் பிரேமஜயந்த ஒரு சட்டத்தரணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்