ரோஹிஞ்சா அகதிகள், ஃபேஸ்புக்கிடம் 30 லட்சம் கோடி ரூபாவுக்கும் அதிகமான தொகையை இழப்பீடாகக் கோரி வழக்கு

🕔 December 7, 2021

ஃபேஸ்புக் சமூக ஊடகத்துக்கு எதிராக அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் உள்ள ரோஹிஞ்சா அகதிகள் வழக்குத் தொடுத்துள்ளனர்.

தங்களுக்கு எதிரான போலிச் செய்திகள் பரவ அனுமதித்தாகவே இவ்வாறு வழக்குத் தொடுத்துள்ளனர்.

மியன்மாரின் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சிறுபான்மை சமூகமான ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக, வன்முறைகளைத் தூண்டுவதற்குகு ஃபேஸ்புக்கில் பகிரப்பட்ட போலிச் செய்திகள் உதவின என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக்கிடம் இருந்து 15,000 கோடி அமெரிக்க டொலர் (இலங்கைப் பெறுமதியில் 30 லட்சத்து 43 ஆயிரத்து 342 கோடி ரூபா) தொகையை அவர்கள் இழப்பீடாகக் கேட்டுள்ளனர்.

தற்போது ‘மெடா ‘ என்று பெயர் மாற்றியுள்ள ஃபேஸ்புக் நிறுவனம் இதுவரை இதற்கு எந்த பதிலையும் அளிக்கவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்