கோட்டாவை தொடர்பு கொண்ட இம்ரான்: பிரியந்த தியவதன கொலை தொடர்பில் உறுதி

🕔 December 4, 2021

லங்கையைச் சேர்ந்த பிரியந்த தியவதன பாகிஸ்தானில் கொல்லப்பட்டமை தொடர்பில், ஐக்கிய அரபு ராஜியத்திலுள்ள இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவைத் தொடர்பு கொண்டு தான் பேசியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இதன்போது இந்த சம்பவம் தொடர்பில் தனது தேசத்தவர்களின் கோபத்தையும், அவமானத்தினையும் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நடந்த சம்பவம் தொடர்பில்ட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக இலங்கை ஜனாதிபதிக்குத் கூறியதாகவும், அவர்கள் மீது முழுத் தீவிரத்துடன் வழக்குத் தொடரப்படும் என்று தான் உறுதியளித்ததாகவும் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: பாகிஸ்தானில் நடந்த காட்டுமிராண்டித்தனம்: எங்கு நிகழ்ந்தாலும் அதற்குப் பெயர் பயங்கரவாதம்தான்

Comments