நெல் சந்தைப்படுத்தும் சபைத் தலைவராக நீல் டி அல்விஸ் நியமனம்

🕔 December 1, 2021

நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைவராக நீல் டி அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கான நியமனக் கடிதத்தை விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேபுதிய தலைவரிடம் இன்று (01) காலை நெல் சந்தைப்படுத்தல் சபையின் பிரதான அலுவலகத்தில் வைத்து கையளித்தார் என, விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக பிரதேச செயலாளர், அரசாங்க அதிபர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளராகவும் நீல் டி அல்விஸ் பதவி வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்