தௌபீக் எம்.பியின் வீடு மீது தாக்குதல்: கிண்ணியாவில் சம்பவம்

🕔 November 23, 2021

(படங்கள்: பைஷல் இஸ்மாயில்)

கிண்ணியா – குறுஞ்சாக்கேணி ஆற்றை கடப்பதற்காக, மிதவைப் பாலத்தில் பயணித்த போது – இன்று (23) நடந்த விபத்தில் 06 பேர் மரணித்தமையினை அடுத்து ஆத்திரம் கொண்ட பொதுமக்கள், கிண்ணியாவிலுள்ள முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சுமார் 45 வருடங்களுக்கு முன்னர் நிர்மாணிக்கப்பட்ட கிண்ணியா – குஞ்சாக்கேணி பாலம் சேதமடைந்தமையினை அடுத்து, புதிய பாலமொன்றை நிர்மாணிப்பதற்கான வேலை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கான ஆரம்ப நிகழ்வு கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி நடந்தது.

பாலம் நிர்மாணத்துக்கான ஆரம்ப நிகழ்வில், முஸ்லிம் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக்கும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலம் நிர்மாணிக்கும் வேலைகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வந்ததாக மக்கள் குற்றஞ்சாடடுகின்றனர்.

இன்று விபத்து நடந்தமையினை அடுத்து, கிண்ணியாவில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக்கின் வீடு மீது மக்கள் தாக்குதல் மேற்கொண்டனர்.

பாலம் நிர்மாண ஆரம்ப நிகழ்வில் – தௌபீக் எம்.பி

தொடர்பான செய்தி: மிதப்புப் பாலம் மூழ்கியதில் பிஞ்சுகள் உட்பட 06 பேர் பலி: குறுஞ்சாக்கேணியில் சோகம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்