நீண்ட வரிசைகளின் யுகத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது; சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது: ஆர்ப்பாட்டப் பேரணில் சஜித் தெரிவிப்பு

🕔 November 16, 2021

ற்போதைய அரசாங்கம் நீண்ட வரிசைகளின் யுகத்தை உருவாக்கியுள்ளது என்றும், சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது எனவும் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

“டட்லிசேனநாயக்க ஆரம்பித்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை வரலாற்றில் முதல் தடவையாக இந்த அரசாங்கம் மூடியுள்ளது” எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசாங்கத்தக்கு எதிராக கொழும்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொண்டு பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மக்கள் பல்வேறுபட்ட விவகாரங்களால் துன்புறுகின்றனர் என தெரிவித்துள்ள அவர், தவறான நிர்வாகம், எதேச்சதிகாரம், சர்வாதிகாரம், இந்த அரசாங்கத்தின் இயலாமை மற்றும் சரியான முறையில் ஆட்சி செய்ய இயலாமை ஆகியவையே இதற்கான முக்கியமான காரணம் எனவும் கூறியுள்ளார்.

எங்கள் மக்களின் துயரங்களை நாங்கள் தெரிவிக்கின்றோம். அவர்களுடைய சமூக, பொருளாதார துயரங்களை வெளிப்படுத்துகின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உணவைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். தாய்மார்களும் குழந்தைகளும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் கூறியுள்ளார்.

சமூகத்தில் விரக்தி ஏற்பட்டுள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். பொறுப்புக்கூறும், பொறுப்பான மக்களுக்கான அரசாங்கத்தை மக்கள் எதிர்பார்க்கின்றனர் எனவும் சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கம் நீண்ட வரிசைகளின் யுகத்தை உருவாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“டட்லிசேனநாயக்க ஆரம்பித்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தை, வரலாற்றில் முதல் தடவையாக இந்த அரசாங்கம் மூடியுள்ளது. கச்சா எண்ணையை கொள்வனவு செய்வதற்கு தம்னிடம் பணமில்லை என அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஆனால் சுத்திகரிக்கப்பட்ட எண்ணையை ‘ஸ்பொட் பேர்சஸ்’ மூலம் பெற்றுக்கொள்ள அரசாங்கம் முயல்கின்றது. தரகுபணம் பெறும் ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்