தீவிர சிகிச்சைப் பிரிவிலுள்ள கொவிட் தொற்றாளர் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளது

🕔 October 14, 2021

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) சிகிச்சை பெறும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை 50 வீதம் குறைந்துள்ளதாக சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தொற்றுப் பரவுவதைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஆதரவு இன்னும் தேவை என்றும் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நாளை இடம்பெறவுள்ள கொவிட் -19 செயலணிக் கூட்டத்தில் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தற்போதுள்ள விதிமுறைகள் மீளாய்வு செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“முகக் கவசங்களை சரியான முறையில் அணியாத சிலர் இன்னும் உள்ளனர். இது போன்ற சூழ்நிலையால் மற்றுமொரு கொவிட் அலையின் எழுச்சியை தவிர்க்க முடியாதது” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்