வடக்கு மாகாணத்துக்கு புதிய ஆளுநர் நியமனம்

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஜீவன் தியாகராஜா இன்று (11) நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல், ஜனாதிபதி முன்னிலையில் புதிய ஆளுநராக அவர் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.
ஆளுநர் பதவியை ஏற்பதற்காக, அவர் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவியை அண்மையில் ராஜிநாமா செய்திருந்தார்.
ஏற்கனவே வடக்கு ஆளுநராக பதவி வகித்த பி.எஸ். எம். சார்ல்ஸ் 2019 டிசம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.