தமிழ் மொழியைப் புறக்கணித்தார் ஜனாதிபதி: ‘அரசியலமைப்பை பின்பற்றணும்’ என்கிறார் மனோ கணேசன்

🕔 October 11, 2021

னுராதபுரத்திலுள்ள கஜபா ராணுவப் படைப் பிரிவு தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்ட ‘கோட்டாபய ராஜபக்ஷ கிறிக்கட் அரங்கு’ திறப்பு விழா கல்லில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டமை குறித்து கண்டனங்கள் எழுந்துள்ளன.

குறித்த கிறிக்கட் அரங்கை நேற்று (10) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திறந்து வைத்தார்.

அதன்போது ஜனாதிபதி திரைநீக்கம் செய்து வைத்த திறப்பு விழாக் கல்லில் சிங்களம் மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே, அந்த கிறிக்கட் அரங்கு பற்றிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன்; ‘விளையாட்டரங்கமாக இருக்கலாம்; விளையாட்டாகவே இருக்கலாம். அன்னை இலங்கையின் பேரில், முதல் பிரஜை, அரசியலமைப்பின் மொழிக்கொள்கையை பின்பற்றனும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘அடுத்த மூன்று வருடங்களில் கோட்டாபய ராஜபக்ஷ செய்யப்போகும் பிழைதிருத்தங்களில் மொழிகொள்கையை பின்பற்றுவதும் ஒன்றாய் இருக்க பிரார்த்திக்கிறேன்’ எனவும் தனது ட்விட்டர் பதிவில் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்